அமிர்த தாரா தீட்சை அமிர்த தாரா தீட்சை பின்பற்றும் முறை
- 🔴 1 - அமிர்த தாரா தீட்சை என்பது உங்களது ஆராவை ஆராய்ந்து உடலில் உள்ள சக்கரத்தை சரியான முறையில் இயக்குவதற்கான மூல மந்திரத்தை அறிந்து தியானம் செய்வதே ஆகும்.
- 🔴 2 - உங்களுக்கான அமிர்த தாரா மந்திரத்தை பெற்றவுடன் உடனடியாக ஆரம்பிக்க கூடாது ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது உடலில் உள்ள சக்கரத்தை சுத்தப்படுத்துவதற்கான பீஜ மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த மந்திரத்ததை தொடர்ந்து மூன்று நாள் ஜெபித்த பிறகே உங்களுக்கான மந்திரத்தை தொடங்க வேண்டும். சக்கரத்தை சுத்தப்படுத்துவதற்கான பீஜ மந்திரத்தை காலை சூரியன் உதித்த பிறகு 108 முறையும் மாலை சூரியன் அஸ்தமிக்கும் போது 108 முறையும் தியானத்தில் அமர்ந்து கண்களை மூடி மனதில் உடல் சுத்தம் அடைவது போன்று பாவனை செய்து பீஜ மந்திரத்தை மூன்று நாள் ஜெபித்து வரவும்.
- 🔴 3 - பீஜ மந்திரம் கொண்டு உடலில் உள்ள சக்கரம் அனைத்தும் சுத்தம் அடைந்த பிறகு நான்காவது நாள் உங்களுக்கான அமிர்த தாரா மந்திரத்தை ஆரம்பிக்க வேண்டும். உடல் சுத்திகரிக்கும் பீஜ மந்திரத்தை அமாவாசை பெளர்ணமி நாட்களில் பயன்படுத்தவும் . இறப்பு வீடு தூர பயணம் மேற்கொள்ளும் போதும் இந்த உடல் சுத்திக்கான பீஜ மந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
- 🔴 4 - நான்காவது நாள் அமிர்த தாரா மந்திரத்தை பயன்படுத்த துவங்கும் போது உருவேற்றி உங்களுக்காக அனுப்பட்ட மஹாலக்ஷிமி விக்கிரகத்தை பசும் பால் கொண்டு அபிஷேகம் செய்யவும் அபிஷேகம் முடிந்தவுடன் உங்களுக்காக கொடுக்கப்பட்ட கருங்காலி bracelet கையில் அணிந்து கொள்ளவும், உங்களது குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு குரு காயத்திரி மந்திரத்தை மூன்று முறை உச்சரித்த பிறகு உங்களுக்கான அமிர்த தாரா மந்திரத்தை 108 முறை மனதிற்குள் ஜெபித்து தியானம் செய்யவும் . காலை 108 முறையும் மாலை 108 முறையும் அமிர்த தாரா மந்திரத்தை ஜெபித்து வரவும். காலை இரவு தவிர்த்து மற்ற நேரங்களிலும் அமிர்தத்தை தாரா மந்திரத்தை ஜெபிக்கலாம். மந்திரம் ஜெபிக்கும் முன்பு கண்டிப்பாக குரு காயத்திரி மந்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும்.
ஓம் ஞான ரூபாய வித்மஹே
ருத்ர மைந்தாயே தீமஹி
தந்நோ குருஜி ப்ரசோதயாத்
- 🔴 5 - உங்களுக்கான ரகசிய அமிர்த தாரா மந்திரத்தை உங்களை தவிர்த்து மற்றவர்கள் ஜெபிக்க கூடாது அப்படி ஜெபிக்கும் போது அதற்கான பின்விளைவுகளை தாங்களே எதிர்கொள்ள வேண்டும். உங்களது அமிர்த தாரா மந்திரத்தை தாங்கள் ரகசியமாக வைத்து கொள்ளவும்.
- 🔴 6 - அமிர்த தாரா தீட்சை மந்திரம் குறிப்பிட்ட பிரச்சனைக்கான மந்திரம் கிடையாது உங்களது சக்கரத்தை மையமாக கொண்டு உங்களது ஆரா வைத்து உங்களுக்கான தனிப்பட்ட மந்திரமாகும். அமிர்த தாரா மந்திரத்தை உங்களது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். அமிர்த தாரா மந்திரத்தின் பலன் முதல் கட்டமாக உங்களது மனதிலும் உங்களது உடலிலும் தெரிய ஆரம்பிக்கும். அடுத்த கட்டமாக உங்களது பிரச்சனைகள் படிப்படியாக குறைய துவங்கும். தொடர்ந்து அமிர்த தாரா மந்திரத்தை தியானிக்கும் போது வாழ்க்கையில் பல மாற்றங்களை உணர முடியும்.